‘சினிமாவை பற்றி பேசுவதற்கு ஒரு எல்லை இருக்கு’ – ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ண பகத் பாசில்..

0
144

Fahadh Faasil : மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். தமிழில் இவர், ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘வேலைக்காரன்’, ‘விக்ரம்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘வேட்டையன்’ படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பகத் நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ரசிகர்கள் குறித்து பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி பகத் பாசில், “திரையரங்கில் படங்களை பார்த்து ரசிகர்கள் அங்கேயே படம் பற்றிய கருத்தை பேசி முடித்துவிடுங்கள். இல்லையெனில் வீட்டிற்குத் திரும்பி செல்லும் வழியிலேயே படம் பற்றி பேசிவிடுங்கள்.

இதை விடுத்து வீட்டுக்குள் உட்கார்ந்து சாப்பிடும்போது நடிகர்கள், அவர்களின் நடிப்பை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் பேசும் அளவுக்கு சினிமா பெரிய விஷயம் இல்லை. சினிமாவை பற்றி பேசுவதற்கு என ஒரு எல்லை உள்ளது.

சினிமாவைவிட தங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. எனவே என்னைப் போன்ற நடிகர்களை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம்” என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here