‘ஆமா அந்த படத்தில் நடிக்கிறேன்’.. சீக்ரெட்டை உடைத்த பிஜு மேனன்.. 

0
111

‘SK 23’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘SK 23’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு அதிரடி ஆக்‌ஷன் கதையம்சமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ருக்மணி வசந்த் என்ற கன்னட நடிகை நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘SK 23’ படத்திற்கு ரூ.100 கோடிக்கும் மேல் செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ‘SK 23’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் வித்யூத் ஜம்வால் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘SK 23’ படத்தில் பிஜு மேனன் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் பிஜு மேனன் சிவா படத்தில் நடிக்கிறீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆமாம் நான் அந்த படத்தில் உள்ளேன். இது ஒரு பெரிய கதை. இந்தப் படத்திற்காக ஒரு வருடம் கால்ஷீட் கொடுத்துள்ளேன்.

வேறு எதுவும் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. ஆனால், படம் முழுவதும் எனது கதாபாத்திரம் இருக்கும்” என தெரிவித்தார்.  இதன் மூலம் பிஜு மேனன் 14 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்க உள்ளார். கடைசியாக தமிழில்,  ‘போர்க்களம்’ படத்தில் நடித்திருப்பார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here