ஹாலிவுட் ஸ்டார் கார்ல் வெதர்ஸ் காலமானார்.. தூக்கத்திலேயே பிரிந்த உயிர்..

0
126

ஹாலிவுட்டில் 1976ஆம் ஆண்டு மாபெரும் ஹிட்டான ‘ராக்கி’ படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் கார்ல் வெதர்ஸ் (76). இந்த படம் நான்கு பாகங்களாக எடுக்கப்பட்டது.

தொடர்ந்து கார்ல் வெதர்ஸ், ‘பக் டவுன்’, ‘செமி டப்’, ‘பிரிடேட்டர்’, ‘லிட்டில் நிக்கி’, ‘தி கம்பேக்ஸ்’, ‘டாய் ஸ்டோரி-4’ போன்ற பல படங்களில் நடித்திருந்தார். 2019ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. தொடர்ந்து, கார்ல் வெதர்ஸ், டெலிவிஷன் தொடர்களில் மட்டும் நடித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி கார்ல் வெதர்ஸ் தூக்கதிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்ல் வெதர்சிஸ் உடலுக்கு அவரது நண்பர்களும், ஹாலிவுட் திரைப்பிபலங்களூம் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இது குறித்து ராக்கி படத்தின் கதாநாயகன் சில்வெஸ்டர் ஸ்டோலன் கூறுகையில், ‘ஒரு சகாப்தம் விடைபெற்றுள்ளது. கார்ல் வெதர்ஸை சந்தித்த பின்னர்தான் என் வாழ்க்கையே மாறியது. அவரது நினைவுகள் நம்மை விட்டு மறையாது’ என உருக்கமாக கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here