ஹீரோக்கள் என்னை கண்டுகொள்வதில்லை.. ஹீரோயின்கள் தான் என்னை மதிக்கிறாங்க.. வேதனையில் கோபி நயினார்..

0
116

Gopi Nainar: தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை அதிகாரிகள் எப்படி மீட்டார்கள் என்பது தான் படத்தின் கதை.

ஆனால், அதனை சுவாரசியமாக பல ட்விஸ்ட்டுகள் வைத்து படத்தை பரபரப்பாக கொண்டு சென்றிருப்பார் இயக்குநர்.

நயன்தாராவும் இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். அந்தப் படத்திலிருந்து நயன் மீதான மதிப்பு ரசிகர்களிடம் அதிகளவு உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஆண்ட்ரியாவை வைத்து ‘மனுசி’ படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆண்ட்ரியா என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார் என்பது போன்ற காட்சிகள் அந்த டிரைலரில் இடம் பெற்றிருந்தது.

இந்த ‘மனுஷி’ படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதற்கிடையே ஜெய்யை வைத்து ‘கருப்பர் நகரம்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கோபி அளித்த பேட்டியில், முன்னணி நடிகர்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, “சினிமாவில் நல்ல கதைகளுடன், நல்ல படங்களை இயக்குபவர்களை ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை மீட்க நம்ம ஊரில் எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லை என தெரிந்ததும், நயன்தாரா உடனே ‘அறம்’ படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். அதேபோல், ‘மனுசி’ கதையின் மையக் கருவை புரிந்ததும் ஆண்ட்ரியாவும் உடனே ஓகே சொல்லிவிட்டார்.

இப்படி இருக்க முன்னணி ஹீரோக்கள் பெரும்பாலும் என்னை கண்டுகொள்வதே கிடையாது. ஹீரோயின்கள் தான் எனக்கு மதித்தும், வாய்ப்பும் கொடுக்கிறார்கள்” என வேதனையுடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here