வெற்றிமாறனுடன் இணைந்த லாரன்ஸ்.. அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்..

0
168

Adhigaram: தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து பட நடிகர்களுக்கும் நடினம் பயிற்றாளராக இருந்திருக்கிறார்.

இவர், முதன்முதலில் தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பாண்டி, முனி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தொடர்ந்து, லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படங்கள் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்டது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜிகிர்தன்டா பாகம் இரண்டு மாபெரும் வெற்றிப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். வெங்கட் மோகன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கு 25ஆவது படமான ‘ஹண்டர்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும், லோகேஷ் கனகராஜ் கதையை ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இந்த படத்திலும் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படி தன்னை பிஸியாக வைத்திருக்கும் லாரன்ஸ் தற்போது புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, வெற்றிமாறன் கதையில் ‘அதிகாரம்’ என்ற படத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநர் துரைசெந்தில் குமார் இயக்கவுள்ளார். இதுகுறித்த போஸ்டரை லாரன்ஸ் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், அதில், “வெற்றிமாறன் சார் எழுதிய பிரமாண்டமான கதையில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here