சந்தானம் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?..  வெளியானது கிளிம்ப்ஸ்.. 

0
90

Inga Naan Thaan Kingu: இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘இங்க நான் தான் கிங்கு’. இந்த படத்தை என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கிறார்.

முன்னதாக, ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’, ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை தயாரித்த இந்நிறுவனம் தற்போது சந்தானத்தை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக பிரியாலயா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா மற்றும் மறைந்த மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை கமல்ஹாசன் வெளியிட்டார்.

தொடர்ந்து சமீபத்தில் டி.இமான் இசையில் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், தற்போது படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் காமெடி நடிகர் பால சரவணன், தம்பி ராமையா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பதாகவும் அவர்கள் கதபாத்திரங்களின் பெயர்களும் அறிமுகப்படுத்தும் படி வீடியோ வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here