‘அவர் இல்லனா நீங்க ஒன்னும் இல்ல’ – மோகன்.ஜி ஆதங்கம்!

0
90

Mohan G : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக இவர் இயக்கும் படங்கள் அமைந்திருக்கும். எதார்த்தமான கதைக்களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரது படங்கள் அமைந்திருக்கும்.

இவரது முதல் திரைப்படமான ‘அட்டகத்தி’ படம் ரிலீஸாகுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதனையெல்லாம் தாண்டி அந்த படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் சென்று நல்ல வரவேற்பு பெற்றது.

அடுத்ததாக கார்த்தியை வைத்து இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் ஒரு வெற்றி இயக்குநராக அனைவராலும் அடையாளம் காணப்பட்டார். பின்னர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கி ‘கபாலி’ படத்தின் மூலம் இவர் ஒரு பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரானார்.

தொடர்ந்து, பல படங்களை இயக்கிய ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம்  ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து, இவரது நீலம் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ரஞ்சித்திடம், தலீத் அரசியல் குறித்து தெரிந்து தான் ரஜினிகாந்த் உங்களது படங்களில் நடித்தாரா? என கேள்வி கேட்கப்பட்டது; அதற்கு, ரஞ்சித் சிரித்திருப்பார். 

இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள், பா.ரஞ்சித் மீது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது  ஒரு நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, பா.ரஞ்சித்தை விமர்சித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், “ரஜினி சார் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் நீங்கள் ஒன்றும் இல்லை” என விமர்சித்துள்ளார். மேலும், ”அவருக்கு அரசியல் தெரியுமா தெரியாதா என்பதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை. உங்களை நம்பி படம் கொடுத்திருக்கிறார், அவர் ஒரு நடிகர் அவ்வளவு தான்” என பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here