7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிச்சென்ற ‘ஓப்பன்ஹெய்மர்’ – குவியும் பாராட்டு..!

0
173

Oppenheimer: திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் விருதானது 1929ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 96ஆவது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெவிலி ஹில்ஸில் இருக்கும் டொல்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சிறந்த சர்வதேச படமாக இங்கிலாந்தில் உருவான ‘தி சோன் ஆஃப் இண்ட்ரெஸ்ட்’ (The Zone of Interest) என்ற படம் வெற்றிபெற்றுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘தி ஹோல்ட் ஓவர்ஸ்’ படத்திற்காக டிவைன் ஜாய் ராண்டால்ஃப் வென்றுள்ளார்.

சிறந்த அனிமேஷன் படமாக ‘தி பாங் அண்ட் தி ஹெரான்’ வெற்றிபெற்றுள்ளது. சிறந்த ஆவணக் குறும்படத்திற்காக ‘லாஸ்ப் ரிப்பேர் ஷாப்’ என்ற குறும்ப்படம் விருது பெற்றுள்ளது. சிறந்த ஆவணப்படமாக ‘20 டேஸ் இன் மரியூபோல்’ என்ற படம் விருது பெற்றுள்ளது.

இந்த நிலையில், சிறந்த துணை நடிகருக்கான விருதானது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக ராபர்ட் டௌனி ஜூனியர் விருது பெற்றுள்ளார். சிறந்த படத்தொகுப்பு ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்துக்காக ஜெனிபர் லேம், சிறந்த ஒளிப்பதிவாளர் ஹொ ய்தி வான் ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.

13 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் மேலும் பல விருதுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, ஏழு விருதுகளை பெற்ற ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here