சூறாவளி பிரச்சாரத்தில் பிரதமர் மோடி.. ஒரே நாளில் பல கூட்டத்தில் பங்கேற்பு..

0
138

PM Modi: கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.  அதன்படி, நேற்று முன்தினம் (ஏப்ரல் 26)  முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட தேர்தல்  வரும் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் இரண்டாவது கட்ட தேர்தலிலும் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். அந்த வகையில் இன்று காலை 11 மணியளவில் பெலகாவி மாலினி சிட்டியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

அந்த தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருக்கிறார்.  பின்னர் அங்கிருந்து மதியம் உத்தரகன்னடா மாவட்டம் சிர்சிக்குச் சென்று பிரச்சாரம் செய்யவுள்ளார். 

மதியம் 1 மணியளவில் சிர்சியில் நடைபெறும் பிரச்சாரத்தில்  பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி பேச இருக்கிறார். அதன் பின்னர் மதியம் 3 மணி மற்றும் மாலை 6 மணி என தொடர்ந்து பல இடங்களில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அதனைத் தொடர்ந்து நாளை (ஏப்ரல் 29) மதியம் 12.15 மணியளவில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். அந்த கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து மராட்டிய மாநிலம் செல்ல இருக்கிறார். 

இதன் மூலம் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகத்தில் 3 நாட்கள் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் வருகையையொட்டி கர்நாடகாவில் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here