மிக்ஜாம் புயல் நிவாரணம்.. தமிழ்நாட்டிற்கு ரூ.276 கோடி ஒதுக்கீடு.!

0
188

Mic Jam storm: தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, கடந்த ஆண்டு டிசம்பரில் தென்மாவட்டங்களி ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.397 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், முதல் கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ.115.45 கோடியும், ரூ.397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து ரூ.160.61 கோடியும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 24ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின்படி மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை கொடுக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here