விஜய் அரசியலுக்கு வந்தா வரட்டும்.. நம்ம ஏன் தலையை பிச்சிக்கணும்? – டிடிவி பேச்சு..!

0
106

TTV about Vijay: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிடிவிடி, “நான் உங்கள் அளவிற்கு பெரிய அரசியல் அறிஞர் கிடையாது.

காலத்தின் கட்டாயத்தில் நான் அரசியலில் இருக்கிறேன். விஜய் ஒரு சூப்பர் ஸ்டார், ரஜினிக்கு பிறகு விஜய், அஜித் இருவரும் டாப் ஸ்டாராக இருக்கின்றனர். விஜய் கட்சி தொடங்கியுள்ளார், அடுத்தக்கட்ட நகர்வை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் எதிர்பார்ப்பும் எனது எதிர்பார்ப்பும் நடக்க போகிறதா?

மக்கள் என்ன சொல்கிறாரோ, அதன்படி தான் நடக்கும். யார் அரசியலில் வெற்றிப் பெறவேண்டும் என மக்களே முடிவு செய்யட்டும். நாம் ஏன் மண்டைய உடைக்க வேண்டும். எங்களுடைய விருப்பம், எங்களுடைய நம்பிக்கை எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணி 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வேண்டும் என்பது தான்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here