‘என் பார்வையில் அவர் அழகாக தான் இருக்கிறார்’ – விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி..!

0
123

Varalakshmi Sarathkumar: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தொடர்ந்து, அங்கிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வரலட்சுமி – நிகோலஸ் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இடையில் இருவரும் சேர்ந்து வெளியே செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வரலட்சுமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

இதற்கிடையே, வரலட்சுமி திருமணம் செய்யவுள்ள நிகோலய் சத்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

தொடர்ந்து, அவர் மீதான விமர்சனங்கள் வரத் தொடங்கின. இதனால், கடுப்பான வரலட்சுமி, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதில் அளித்துள்ளார். 

அதில், “எனது  தந்தை கூட தான் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நிக்கை பற்றி மக்கள் எப்படிநெல்லாம் விமர்சித்து வருகிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். என் பார்வையில் அவர் மிகவும் அழகாக இருக்கிறார்.

எங்களைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களை வெளியிடுபவர்கள் குறித்தெல்லாம் நான் கவலைப் படுவதில்லை. அவர்களது விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.

நிக்கின் பெற்றோர் ஆர்ட் கேலரியை நடத்துகின்றனர். அவரும் அவரது மகளும் பவர் லிப்டிங்கில் தங்கப் பதக்கம் வென்றவர்கள். இவை எல்லாமே எனக்கு நன்றாக தெரியும்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here