வெறித்தனமாக வெளியான ‘ரத்னம்’ டிரைலர்.. அடித்து தூள் கிளப்பிய விஷால்..

0
110

‘Rathnam Trailer’ : இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்வேறு மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

‘ரத்னம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘Don’t Worry Da Machi’ பாடல் மார்ச்.09 வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அவரே பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு விவேகா வரிகள் எழுதியிருக்கிறார்.

தொடர்து ‘ரத்னம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘எதனால’ என்ற பாடல் வருகிற மார்ச் 29ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா செல்லும் கதாநாயகன அங்குள்ள வில்லன்களை துவம்சம் செய்கிறார். இந்த படத்தில் சமுத்திரகனி ஒரு அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மிரட்டலாக வெளியான இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து இந்த படம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. மிரட்டலாக வெளியான இந்த டிரைலர் ரசிகர்களிடம் ரீச்சான நிலையில் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here