மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்த தமிழக அரசு.. ஏன் தெரியுமா?..

0
92

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

மறுமக்கம் இதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் தாமிரபரணி ஆற்றில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால், ஆற்றின் கரையோர கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்தன. தூத்துக்குடி இந்த பெரும் பேரிடர்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.

ஆனால், இதுவரை மத்திய அரசு அதுதொடர்பான எந்த பதிலும் கொடுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் பாஜக மீது குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று வேலூரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நிவாரணம் வழங்காத மத்திய அரசு மீது வழக்குத் தொடரப்போவதாக தெரிவித்தார்.

அந்த வகையில் தற்போது வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here