காகிதம் போல் மழை நீரில் மிதகும் மாணவர்கள்‌

0
108

கல்லூரி மாணவர்கள்‌ என்ன கப்பலில் கல்லூரிக்கு செல்வார்களா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரின் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், கடல் போல காட்சியளிக்கிறது. மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளது.இன்றும் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காதது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய அரசு! சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும். மாணவர்கள்‌ என்ன கப்பலில் கல்லூரி செல்வார்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here