அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமி..!

0
186

Actress Gautami: பாஜகவில் இருந்த நடிகை கௌதமி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது நடிகை கௌதமி அதிமுக இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகி கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

காயத்ரி ரகுராமுக்கும், அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. அதேபோல், நடிகை கௌதமியும், நில அபகரிப்பு விவகாரத்தில் பாஜக சார்பில் யாரும் உதவில்லை என்பதன் காரணமாக கௌதமியும் பாஜகவில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here