ரஃபா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்.. ஜோ பைடன் வேதனை..!

0
213

இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்ட முடிவு செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்கு பகுதியில் இந்த தாக்குதல் நடந்த நிலையில் அங்கிருந்த மக்கள் தெற்குப் பகுதியான ரஃபா, கான் யூனிஸ் ஆகிய பகுதிகளுக்கு இடம் மாறினர்.

இந்த நிலையில், கான் யூனிஸ் மீதும் ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்த கேள்வி எழுப்பியதற்கு, ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டியே தீர வேண்டும் ஆகையல் அனைத்துப் பகுதிகளிலும் தாக்குல் நடக்கும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

ரஃபா மீது தாக்குதல் நடத்தினார் எகிப்து – காசா எல்லை மூடப்படும் அபாயகரமனா சூழல் ஏற்படும், மக்களும் பாதிக்கப்படுவர் என ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வேதனை தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, தற்போது அங்குள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசியதாக தெரிகிறது.

அப்போது, “ரஃபா மீதான இந்த தாக்குதல் மிகுந்த வேதனையளிக்கிறது, தாக்குதலுக்குப் பதிலாக வேறு வழிகள் இருந்தால் அதனை கடைபிடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

ஆனால், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, “வேறு வழிகள் இல்லை, இருந்தால் கடைபிடிக்க முயற்சிக்கிறோம்” என கூறியதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறியுள்ளார்.

இந்த இஸ்ரேல் தாக்குதலால், காசாவில் இருந்த 31 ஆயிரத்திற்கும் மேற்பட் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காசா முனையில் மொத்தம் 2.3 மல்லியன் பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது ரஃபா மீதான தாக்குதலுக்கு ஜோ பைடன் வேதனை தெரிவித்த நிலையில், இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் குழு அமெரிக்காவிற்கு செல்லவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here