அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் டிரம்ப் வெற்றி..!

0
123

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதில் 52.5 விழுக்காடு ஆதரவு பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அதேவேளையில், 46.6 விழுக்காடு ஆதரவு பெற்று நிக்கி ஹாலே இரண்டாம் இடம் பிடித்தார். இது டிரம்புக்கு முதல் வெற்றியாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here