அட்டகாசமான லுக்கில் TVS Apache RTR 160 4V பைக்.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

0
184

Apache RTR 160 4V: டிவிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் அப்பாச்சி சீரிஸ் பைக்குகளை வாங்க பயனர்கள் காத்துக்கிடக்கின்றனர். மேலும், இந்த சீரியஸில் 160cc வகை மாடலான Apache RTR 160 4V பைக்கில் தற்போது டூயல் சேனல் ABS வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல நாட்களாக இந்த வசதியை எதிர்பார்த்து பயர்கள் காத்திருந்தனர். தற்போது அறிமுகமான இந்த சீரியஸில் டூயல் சேனல் ABS மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஒரு 159.7cc சிங்கள் சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் உள்ளது.

இதன் பவர் 17.55 PS மற்றும் டார்க் 14.73NM ஆகும். இதனுடன் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி உள்ளது. மேலும், இந்த பைக்கில் புதிய வசதியாக Sport, Urban, Rain என 3 டிரைவிங் மோட் செட்டப் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த பைக் பார்ப்பதற்கு ஒரு பிரீமியமான ஸ்போர்ட்ஸ் பைக் போல காட்சித் தருகிறது. மேலும் இந்த பைக்கில் டூயல் டோன் கலர் வசதிகள், மஸ்குலர் பியூயல் டேங்க், LED லைட், ஸ்போர்ட்டி என்ஜின் கவுல் உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் முன்பக்கம் டெலெஸ்கோபிக் போர்க், பின்பக்கம் மோனோ ஷாக் வசதி, டியூப்லெஸ் டயர், அலாய் வீல் வசதி, முன்பக்க டிஸ்க் பிரேக், பின்பக்க ட்ரம் பிரேக், அடஜஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் கிளட்ச் லிவர் ஆகிய வசதிகள் கொண்டுள்ளது.

இந்த பைக் இதன் ஸ்பெஷல் எடிஷன் பைக்கை விட 2ஆயிரத்து 820 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 34ஆயிரத்து 990 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாப் மாடல் பைக் என்பதால் அனைத்து வசதிகளும் பெற்றிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here