‘தமிழ்நாடு சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகிறது’ – முகேஷ் அம்பானி புகழாரம்!

0
141

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் (ஜன.07) நாளையும் (ஜன.08) நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பிரம்மாண்ட அளவில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் கீழ் தமிழ்நாடு சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகிறது” என புகழாரம் தெரிவித்தார்.

தொடர்ந்து ஜியோ நிறுவனம், 35ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

எரிசக்தி துறையில் 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், CBRAIN சாப்ட்வேர் நிறுவன இயக்குநர் நீல்ஸ் டேண்டரப் கூறுகையில், “தமிழ்நாடு தொழில் தொடங்குவதற்கு சரியான இடம்; இது சரியான நேரம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறுகையில், “தமிழ்நாடு 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை எட்ட எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை அடைய செயல் திட்ட அறிக்கையும் வெளியீடப்பட்டது.

முன்னதாக ஓலா, டாடா, கோத்ரெஜ் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: டாடா, கோத்ரேஜ் நிறுவனங்கள் முத்லீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here