‘தொழில் தொடங்க தமிழ்நாடு சிறந்த மாநிலம்’ – ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால்!

0
195

TamilNadu Global Investors Meet 2024: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் (ஜன.07) நாளையும் (ஜன.08) நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பிரம்மாண்ட அளவில் நடைபெற்று வருகிறது.

இந்த, மாநாட்டில் ஓலா எலக்ட்ரிக் நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் பாவிஷ் அகர்வால் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. நவீன தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு மிகுந்த ஈடுபாடு செலுத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை அந்நிறுவனம் அமைக்கவுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல். தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் VinFast நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி: வருகை தராத முன்னனி நட்சத்திரங்கள் யார்?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here