கனமழை: சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிப்பு! விமானங்கள் தாமதம்

0
69

சென்னையில்: தலைநகர் சென்னையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னையில் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல்வேறு விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.

தலைநகர் சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. மாலை ஆரம்பித்த மழை அதன் பிறகு நகரின் முக்கிய பகுதிகளில் அதிகரிக்கத் தொடங்கியது.

சென்னையின் நகர்ப் பகுதிகள் புறநகர்ப் பகுதிகள் என்று பரவலாக பல்வேறு பகுதிகளிலும் மவை அதிகமாகவே இருந்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

தொடர் மழையால் சாலைகளில் நீர் தேங்கிய நிலையில், நேற்று பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும்,நீர் தேங்கியதால் நகரில் இருக்கும் சில சுரங்கப்பாதைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. கனமழை தொடர்ந்து கொட்டி வந்த நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மழைநீரைத் தேங்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. மேலும், மழை நீற் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நேற்றிரவு குறிப்பாகச் சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை பகுதிகளில் மழை அதிகமாக இருந்தது. குறிப்பாக மீனம்பாக்கத்தில் மழை அதிகமாகவே இருந்தது. கனமழை காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் சிரமத்தை எதிர்கொண்டனர். தொடர்ச்சியாகக் கனமழை பெய்த நிலையில், சென்னையில் இருந்து கிளம்ப வேண்டிய டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரூ உள்ளிட்ட 30+ விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. அதேபோல சென்னைக்கு வரவேண்டிய திருச்சி, மதுரை உள்பட 10+ விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here