ராமர் புகழை பாடி வீடியோ வெளியிட்ட குஷ்பூ..! ஆன்மீகத்தை பரப்ப வேண்டுகோள்..!

0
124

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நாளை (ஜன.22) நடக்க உள்ளது. இந்த கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், பல்வேறு முக்கிய நபர்கள் இந்த நிகழ்வுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த நிலையில், குஷ்பூ தனது ‘X’ தளத்தில் ராமர் குறித்து இரண்டு வரிகளில் பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் நடிகைகள் மீனா, கீர்த்தி சுரேஷும் இதுபோல் பாடி வீடியோ வெளியிட அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், அந்த பதிவில் அவர் கூறியதாவது, “அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக கடவுள் ராமர் குறித்து இரண்டு வரிகளை கூறுகிறேன்.

ராமரைக் கொண்டாடும் இந்த மங்களகரமான நேரத்தில், ஸ்ரீராம பக்தர்களை இந்த இரண்டு வரிகளைப் படித்து பக்தி மற்றும் ஆன்மீகத்தின் செய்தியைப் பரப்ப அழைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் சி.ஆர். கேசவன், சுமலதா, நடிகைகள் சுஹாசினி, மீனா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷனுக்கும் இந்த நன்மையின் சங்கிலியை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக நடிகையும் பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ ‘நான் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவில்லை’ என அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ‘பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது’ – சேகர் பாபுவுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here