சிக்கலில் சிக்கியுள்ள டி எல் எஃப் நிறுவனம்…. அமலாக்கத்துறை சோதனை

0
86

ரியல் எஸ்டேட் நிறுவனமான டி எல் எஃப் தற்போது பெரும் சிக்கலில் சிக்கி உள்ளது. அதாவது சூப்பர்டெக் மற்றும் அதன் புரோமோட்டார்களுக்கு எதிரான பணமோசடி வழங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக குருகிராமில் உள்ள டிஎல்எஃப் வளாகத்தில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது.

கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் காரணமாக ஆவணங்கள் சில கிடைத்துள்ளாதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை சூப்பர்டெக் நிறுவனத்திற்கு எதிரான ED விசாரணையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று துறை சார்ந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொடர் விசாரணையில் ஆவணங்கள் சிக்கி உள்ளன.

இதற்கு முன் ஜூன் மாதம், அமலாக்க இயக்குனரகம் பணமோசடி வழக்கு தொடர்பாக சூப்பர்டெக் நிறுவனத்தின் புரோமோட்டாரான ராம் கிஷோர் அரோராவை கைது செய்தது.

அதாவது முதலீட்டாளர்கள், வீடு வாங்கும் நபர்களிடமிருந்து பெற்றப்பட்ட நிதியை ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அரோரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் நடவடிக்கையை அடுத்து வரும் வாரங்களில் டி எல் எஃப் நிறுவனத்தின் பங்கு விலை சரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here